Home » மணிப்பூர்: கலவர காலக் குறிப்புகள்
இந்தியா

மணிப்பூர்: கலவர காலக் குறிப்புகள்

நூற்றுக்கணக்கான இளைஞர்கள். இரண்டு பழங்குடியினப் பெண்கள். அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதன் பிறகு கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். காணவே சகிக்காத இந்த சம்பவம் நடந்தது மே மாதத் தொடக்கத்தில். இந்தக் காணொளிதான் இப்போது சமூக ஊடகங்களில் பரவி, பிரதமர் மோடியின் கள்ள மௌனத்தைக் கலைத்திருக்கிறது.

தன் சொந்த நாட்டில் கடந்த எண்பது நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரங்கள் குறித்து ஒருபோதும் வாய் திறக்காத பிரதமர் இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார். இந்திய தேசத்தின் 140 கோடி மக்களும் வெட்கித் தலைகுனிகின்றனர் என்று பேசியிருக்கிறார். வெட்கித் தலைகுனிவது இந்தச் செயலுக்காக மட்டுமில்லை. அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்க இன மக்களுடன் இணைந்து அரசு நடத்துகிற இனப் படுகொலையைப் பார்த்துத்தான் மொத்த தேசமும் வெட்கித் தலை குனிகிறது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது தேசிய மகளிர் ஆணையம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு மூன்று முறை புகாரளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லியிருக்கிறது மகளிர் ஆணையம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!