மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம். மிகையல்ல. பல காலமாகவே கொன்று புதைக்கப்பட்ட குற்றங்களின் பேட்டைப் பட்டியலில் மெக்ஸிகோவுக்கு முதல் வரிசை இடம் உண்டு.
குவடலஹாரா நகரின் புறநகர்ப் பகுதியில் தவறுகள் எந்த அளவிற்கு நடக்கின்றன என்பதற்கு அவர்களே வீட்டு வாசலில் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். நம் ஊரில் தெருவிற்கு ஒன்றிரண்டு டூலெட் போர்டுகள் வைத்திருப்போம்… அவ்வளவு தானே? அங்கே நடக்கும் தவறுகளுக்கான ஒரே சாட்சி – எல்லா வீட்டிற்கு வெளியேயும் “விற்பனைக்கு” என்று பலகைகள் தொங்கும். 2016-இல் ஒரு அமைதியான தெருவின் வீட்டில் அழுகிய சடலத்தைப் போலீசார் கண்டெடுத்தனர். அப்போது மக்கள் வெளியேறத் தொடங்கியதுதான்.
Add Comment