Home » கணைகளின் கதை
போர்க்களம்

கணைகளின் கதை

ஜூன் பதிமூன்றாம் தேதி மற்றுமொரு போரைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இந்த முறை அது குறிவைத்த நாடு, இரான். இரானின் பதில் தாக்குதலும் தீவிரமாகவே உள்ளது. நடுவே அமெரிக்கா உள்ளே புகுந்து இரானின் மூன்று முக்கியமான அணுசக்தி இலக்குகளைத் தாக்கிவிட்டுப் போனதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இருநாடுகளும் பயன்படுத்தும் ஆயுதங்களைப் பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, இரானின் ஆயுத பலம் முதல் முதலாக இப்போரில்தான் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

நிலப்பரப்பு அடிப்படையில் இஸ்ரேல் மிகவும் சிறிய நாடு. இஸ்ரேலைவிட சுமார் எழுபத்தைந்து மடங்கு பெரியது இரான். இருந்தாலும், நிலப்பரப்பு ஒரு நாட்டின் இராணுவ வலிமையைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதில்லை. இராணுவத்துக்காகச் செலவிடப்படும் தொகை, புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்திறன், கூட்டாளிகளின் வலிமை, பொருளாதார பலம் போன்றவையே அதைத் தீர்மானிக்கின்றன.

அண்மைக் காலங்களில் பெரிய போர்கள் எதையும் உலகம் பார்க்கவில்லை. ஆங்காங்கே ஒருதலைப்பட்சமான தாக்குதல்களையே பார்த்துவருகிறோம். இஸ்ரேல் காசாவைத் தாக்கிவருவதைப் போல. ரஷ்யா உக்ரைனைத் தாக்குவது போல. இத்தகைய தாக்குதல்களில் பேரழிவை ஏற்படுத்தும் பெரியரக ஏவுகணைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், வலிமையான இரு எதிரிகள் மோதும்போது இத்தகைய ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உண்டு. இரானும் இஸ்ரேலும் அவ்வகையில் ஒன்றுக்கொன்று வலிமைமிகுந்த எதிரிகள். இராணுவ வலிமையின் அடிப்படையில் பட்டியலிட்டால் இஸ்ரேல் பதினைந்தாவது இடத்திலும் இரான் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!