7. மக்களை நெருங்குதல்
கொல்கத்தாவில் காந்தியின் வேலைகள் முடிந்துவிட்டன. அவர் கோகலேவைப் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது.
காந்திக்கு இதில் வருத்தம்தான். ஆனால், அவர் அடுத்தபடியாக வேறொரு முக்கியமான வேலையைத் திட்டமிட்டிருந்தார். அதைக் கோகலேவிடமும் சொன்னார், ‘நான் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க எண்ணியுள்ளேன்.’
‘நல்ல விஷயம்தான். கண்டிப்பாகச் செய்யுங்கள்’ என்றார் கோகலே.
‘சுற்றிப்பார்த்தல்’ என்பது பொதுவாக மகிழ்ச்சிப் பயணமாகத்தான் கருதப்படுகிறது. அதாவது, கோயில்கள், வரலாற்றுத் தலங்கள், இயற்கை அழகு மிகுந்த இடங்கள் போன்றவற்றைப் பார்த்து ரசிப்பது, அதன்மூலம் பரபரப்பான வேலையிலிருந்து ஓய்வெடுப்பது.
ஆனால், காந்தியின் ‘சுற்றிப்பார்த்தல்’ முற்றிலும் வேறு நோக்கத்தைக் கொண்டிருந்தது. அவர் இந்தியாவை நெருங்கிப் பார்க்க விரும்பினார். அதாவது, இடங்களை அன்றி, மக்களை, அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ள நினைத்தார்.
Add Comment