Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 10
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 10

10. சிறிய வேலையும் பெரிய வேலைதான்

கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது.

அவர்கள் உலகின் ஏதோ ஒரு மூலையில் குடியேறி, நிறவெறி கொண்ட மக்கள், அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு, பல தலைமுறைகளாகத் துன்பத்தையும் அவமதிப்புகளையும் சந்தித்து, அதை எப்படி எதிர்கொள்வது, என்ன செய்வது என்று புரியாமல் தவித்து, ‘இதுதான் நமக்கு வாய்த்தது’ என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழப் பழகியிருந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் காந்தியின் தலைமை ஒரு புதிய வாசலைத் திறந்துவைத்தது, இந்த வழியாக நடந்தால் நமக்கு நல்ல காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது. இப்போது, கோகலேவின் வருகை அவர்களுடைய நம்பிக்கையை மேலும் உறுதியாக்கியது. ‘கோகலேவின் ஆதரவு நம்முடைய போராட்டத்தை இன்னும் வலுவாக்கும். நாம் சொல்லும்போது காது கொடுத்துக் கேட்காத தென்னாப்பிரிக்க ஆட்சியாளர்களும் பொதுமக்களும் கோகலேவின் சொற்களை மதிப்பார்கள். அதன்மூலம் நமக்கு இன்னும் விரைவில் தீர்வு கிடைக்கும்’ என்று நம்பினார்கள்.

காந்தியும் தன்னுடைய குருநாதரை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தார். கோகலேவின் வருகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும், தென்னாப்பிரிக்காவின் முதன்மையான நகரங்கள், இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பகுதிகளுக்கெல்லாம் அவரை அழைத்துச்செல்லவேண்டும், வரவேற்புக் கூட்டங்கள், பாராட்டு விழாக்கள் நடத்தவேண்டும், அந்த விழாக்களுக்கு உள்ளூர்ப் பெருந்தலைவர்களை அழைக்கவேண்டும், கோகலேவுக்கு நாம் தருகிற வரவேற்பைக் கண்டு எல்லாரும் மூக்கின்மீது விரல் வைக்கவேண்டும் என்றெல்லாம் ஆர்வத்துடன் திட்டமிட்டார். அவருடைய நண்பர்களும் தொண்டர்களும் மளமளவென்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!