Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 11
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 11

11. மராத்தியில் பேசுங்கள்

தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டத்தைப்பற்றிக் கோகலேவுக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளூர்க்காரர், பல ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தில் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிற தலைவர் என்றமுறையில் காந்திக்கு அவரைவிடக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்குமல்லவா?

அதனால், ஜொகன்னஸ்பர்க் விருந்துக் கூட்டத்துக்கு முன்பாகக் கோகலே காந்தியை அழைத்து, ‘இந்தக் கூட்டத்தில் பேசும்போது நான் எதையெல்லாம் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று விசாரித்தார், ‘உங்கள் மனத்தில் உள்ளதையெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

கோகலே அதோடு நிறுத்தவில்லை, காந்திக்குச் சில கட்டுப்பாடுகளையும் விதித்தார், ‘உங்களுடைய உரை மிகவும் நீளமாக இருக்கக்கூடாது, மிகச் சுருக்கமாகவும் இருக்கக்கூடாது. குறைந்த சொற்களில் நீங்கள் முதன்மையாகக் கருதுகிற எல்லாக் கருத்துகளையும் சொல்லிவிடவேண்டும்.’

‘இன்னொரு விஷயம், நீங்கள் எழுதுகிற எல்லாவற்றையும் நான் பேசுவேன் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது’ என்றார் கோகலே, ‘சொல்லப்போனால், நீங்கள் எழுதியிருக்கிற எதையும் நான் பேசாமல் போகலாம். உங்களுடைய உரையிலிருந்து என் உரை முற்றிலும் மாறுபட்டிருக்கலாம். அப்போது நீங்கள் வருத்தப்படக்கூடாது.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!