Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 13
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 13

13. ஓர் அவசரப் புத்தகம்

‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டுமா?’ என்று சிலர் கோகலேவிடம் கேட்டதுண்டு, ‘நீங்கள் பெரிய அறிஞர், செயற்பாட்டாளர். அவ்வப்போது மற்ற பிரச்சனைகள், போராட்டங்களைப்பற்றியும் சிந்திக்கலாமே, உங்களுடைய கருத்துகளைச் சொல்லி மக்களை வழிநடத்தலாமே!’

‘அதை நீங்கள் செய்யுங்கள். இதை நான் செய்கிறேன்’ என்று அவர்களுக்குப் பதிலளிப்பார் கோகலே, ‘முதலில், என் நாடு விடுதலை பெறவேண்டும். அதன்பிறகு, நான் மற்ற பிரச்சனைகளைப்பற்றி யோசிப்பேன். இப்போதைக்கு, என்னுடைய நேரம், ஆற்றல் அனைத்தும் இந்த விடுதலைப் போராட்டத்துக்குத் தேவை.’

இந்தக் காலகட்டத்தில் காந்தியும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஓர் அணுகுமுறையைத்தன் பின்பற்றிவந்தார். ஒரே வேறுபாடு, கோகலேவுக்கு இந்திய விடுதலைப் போராட்டம் என்றால், காந்திக்குத் தென்னாப்பிரிக்க இந்தியர் சத்தியாக்கிரகம். அதில் வெற்றி கிடைத்தபிறகுதான் மற்ற எல்லாம்.

ஆனால் அதற்காக, அவர் இந்தியாவின் விடுதலையைப்பற்றிச் சிந்திக்கவே இல்லை என்று சொல்லமுடியாது. உண்மையில், காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுடைய உரிமைப் போராட்டத்தை மும்முரமாக வழிநடத்திக்கொண்டிருந்தபோது இந்திய விடுதலையைப்பற்றி ‘ஹிந்த் சுவராஜ்’ என்ற ஒரு முழுப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!