Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 21
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 21

21. ஒத்துழைப்பு இயக்கம்

காந்தி கோகலேவைப் பார்ப்பதற்கென்று லண்டன் வருவதற்குச் சுமார் ஓராண்டு முன்பாக, அதே லண்டன் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார் கோகலே. அவருடைய உயிர்ப்பான பேச்சும் கருத்துகளும் அங்கு கூடியிருந்த இந்தியர்களை மிகவும் கவர்ந்தன. தாங்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவேண்டும், தங்கள் தாய்நாட்டின் துன்பங்களை நீக்குவதற்கு உதவவேண்டும் என்று அவர்கள் தூண்டப்பட்டார்கள்.

அன்றைய கூட்டத்தில் கோகலேவின் பேச்சால் ஈர்க்கப்பட்ட இந்திய இளைஞர்களில் ஒருவர், சரோஜினி நாயுடு.

சரோஜினி வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் பிறந்து, வளர்ந்தது தென்னிந்தியாவிலுள்ள ஹைதராபாதில். துணிச்சலான பெண், கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஊக்கத்துடன் பங்கேற்றுப் பணிபுரிந்துகொண்டிருந்தவர். கோகலேவின் பேச்சும் வழிகாட்டுதலும் சரோஜினிக்குத் தெளிவான பாதையை, செயல்திட்டத்தை வகுத்துக்கொடுத்தன.

1914ல் காந்தி லண்டனுக்கு வந்தபோது கோகலே அங்கு இல்லை. ஆனால், சரியாக அதே நேரத்தில் சரோஜினி லண்டனில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அதனால், தன் சார்பாகக் காந்தியைச் சந்தித்து வரவேற்கும்படி சரோஜினியை அனுப்பிவைத்தார் கோகலே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!