Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 89
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 89

89. காந்தியின் மகள்

கொள்கை உறுதியில் காந்தி எப்படிப்பட்டவர் என்பதைத் தூதாபாயை ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்ட நிகழ்வு உலகுக்குக் காண்பித்தது. அத்துடன், எப்பேர்ப்பட்ட உறுதியான எதிர்ப்பையும் பொறுமையாலும் அன்பாலும் மாற்றிவிடலாம் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டாகவும் அது அமைந்தது.

‘இந்த நிகழ்ச்சியின்மூலம், தீண்டாமையை எதிர்ப்பது என்கிற தேர்வில் சத்தியாக்கிரக ஆசிரமம் வெற்றிபெற்றது’ என்று இதைப்பற்றி மகிழ்வுடன் எழுதினார் காந்தி. தூதாபாய்க்குப்பிறகு, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும் ஆசிரமத்துக்குச் சுதந்தரமாக வந்து தங்கினார்கள். அதையெல்லாம் யாரும் எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை. அது ஓர் இயல்பான விஷயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், இதற்கெல்லாம் வழிவகுத்த தூதாபாய் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் அதிக நாள் தங்கவில்லை என்று தெரிகிறது. அதே ஆண்டில் (1915) தங்கள் குடும்பம் மும்பைக்குத் திரும்பிவிட்டதாக அவருடைய மகள் லட்சுமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆண்டில் ஆசிரமத்துக்கு வந்தவர்கள், அங்கிருந்து கிளம்பியவர்கள், சொல்லாமல் ஓடிப்போனவர்களையெல்லாம்கூட ஒழுங்காகப் பட்டியலிடும் காந்தி இதைப்பற்றி எதுவும் எழுதவில்லை. அதனால், இது லட்சுமியின் நினைவுப் பிழையாக இருக்கலாம்.

அத்துடன், 1916 ஜூன் மாதத்தில் அகமதாபாதில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய காந்தி தூதாபாயைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அதில் அவர், ‘தூதாபாய் என்னோடு தங்கியிருக்கிறார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, தூதாபாய் குடும்பம் சுமார் ஓராண்டுக்காவது காந்தியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தது என்று ஊகிக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் காந்தியும் தூதாபாயும் நன்கு நெருங்கிவிட்டார்கள் என்கிறார் தூதாபாயின் பேரன் மகன்பாய். இந்த அன்பின் அடையாளமாகத் தூதாபாய் தன் மகனுக்கு ‘மோகன்பாய்’ என்று காந்தியின் பெயரைச் சூட்டினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!