Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 99
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 99

99. கன்னிப் பேச்சு

ஜனவரி 31 அன்று, காந்தி காசிக்குப் புறப்பட்டார்.

அகமதாபாதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்தபிறகு, ஃபிப்ரவரி 2 அன்று அவர் காசியில் வந்திறங்கினார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பனாரஸ், வாரணாசி என்றும் அழைக்கப்படுகிற காசி, இன்றைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில் நகரம். இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்ற கங்கையாற்றின் கரையில் இது அமைந்துள்ளது. அதனால், ஆண்டுமுழுவதும் ஏராளமானோர் இங்கு ஆன்மிகப் பயணமாக வந்துசெல்வார்கள்.

ஆனால், 1916 ஃபிப்ரவரியில் காந்தி காசிக்கு வந்தது வேறொரு காரணத்துக்காக. அப்போது அங்கு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் என்ற புதிய கல்வி அமைப்பு நிறுவப்பட்டிருந்தது. அதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதற்காகவும் சிறப்புரை ஆற்றுவதற்காகவும்தான் காந்தி வந்திருந்தார்.

1905 டிசம்பரில் காங்கிரஸ் மாநாடு காசியில் நடைபெற்றது. அப்போதே இந்தப் பல்கலைக்கழகத்தைப்பற்றிப் பொதுவில் அறிவித்துவிட்டார் அதன் நிறுவனரான மதன் மோகன் மாளவியா. அதன்பிறகு, அவர் பல்கலைக்கழகத்துக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினார், அதுபற்றித் தலைவர்கள், மக்களுடைய கருத்துகளைத் திரட்டினார், அவற்றின் அடிப்படையில் அந்தத் திட்டத்தை ஒழுங்குபடுத்தினார், நிதி திரட்டினார், பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுப் புதிய பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

பழைமையான, புகழ் பெற்ற காசி நகரத்தில் நவீனக் கல்வி முறைகளுடன் ஒரு பல்கலைக்கழகம் என்பது மிகவும் புதுமையான யோசனைதான். கல்வியின்மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை வளமாக்கும் இந்த முயற்சிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பல அரசர்கள் ஆதரவளித்தார்கள். ஃபிப்ரவரி 4 அன்று, அப்போதைய இந்திய வைஸ்ராய் ஹார்டிங் பிரபு இந்தப் பல்கலைக்கழகத்தைத் திறந்துவைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!