மிகப் பெரிய மக்களாட்சியின் தலைவர் தானாகவே விரும்பிக் கேட்டுக்கொண்டு அமெரிக்க அதிபரைச் சந்திக்க வந்து சென்றார். இதைத்தான் வெற்றிகரமான பயணமாக நமது ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மோடிக்கு அழைப்பிதழ் இல்லை. அனைத்துத் தூதரகங்களுக்கும் அமெரிக்க மரபின்படி அனுப்பப்பட்டது, இரண்டு அழைப்பிதழ்கள். அதில் ஒன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துக்கொண்டு வந்து பங்கேற்றார். இந்தியா சார்பாக வந்தவரை கவனிக்கக்கூட இல்லை.
இதனைப் பொருட்படுத்தாமல் இந்தியப் பிரதமர் டிரம்ப்பை விரும்பிச் சந்திக்க நேரம் கேட்டு வந்தார். இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான் தலைவர்கள் அதிபரின் அழைப்பின் பேரில் வந்ததால், மாளிகையின் வாயிலுக்கு, அதிபரே வந்து அழைத்துச் சென்று விருந்தோம்பினார். ஆனால், தானே நேரம் கேட்டு வந்த இந்தியப் பிரதமரை வாயிலுக்கு வந்து அழைத்துச் சென்றது, வெள்ளை மாளிகை அதிகாரி.
Add Comment