கொரோனவை எதிர்த்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பிக்கும் போதெல்லாம் வேறு ஒரு புதிய வைரஸ் பரவுவதாக செய்தி வருகிறது. அப்படிப் பரவிய எபோலா வைரஸ், மார்பர்க் வைரஸ், நிபா வைரஸ் வரிசையில் இப்போது பரவும் வைரஸ் குரங்கு அம்மை வைரஸ்.
அம்மை நோய் நான்கு வகைப்படும். சின்னம்மை, பெரியம்மை, குரங்கம்மை, மற்றும் விளையாட்டு அம்மை. இந்த நான்குவித அம்மை நோய்களுக்கிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வித்தியாசங்களும் உண்டு. இந்த நான்கு வகை அம்மைகளில் மட்டும் தான் நீர்க் கொப்பளங்கள் உருவாகும். தட்டம்மை (measles) நோய்த் தொற்றை இவற்றுடன் சேர்க்காததற்கான காரணம் தட்டம்மை நீர்க் கொப்பளங்களை உருவாக்காது. சிறு செம்புள்ளிகள் மட்டும் சருமத்தில் காணப்படும்.
Add Comment