Home » முத்தென்று கொட்டு முரசே!
தமிழ்நாடு

முத்தென்று கொட்டு முரசே!

ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடத் தன் அம்மா தினமும் கொடுக்கும் ஒரு ரிங்கிட்டை 35 நாள்கள் சேர்த்து வைத்தால் ஒரு நுண்சில்லு வாங்கமுடியும். பரோட்டாக்களைத் தியாகம் செய்து, பணம் சேர்த்து மைக்ரோசிப்புகள் வாங்கி கணினியில் தமிழைக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் அனுபவங்கள் சுவாரஸ்மானவை.

“இதில் ஏன் தமிழ் இல்லை?” முத்துநெடுமாறனின் நாற்பதாண்டு கால தொழில்நுட்பச் சாதனைகள் அனைத்துக்கும் இந்த ஒற்றைச் சொற்றொடர்தான் அடிப்படை. எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் அவரைக் குடைந்தெடுத்தது இந்தக் கேள்விதான். ஒவ்வொரு முறையும் இந்தக் கேள்விக்கு அவர் கண்டுபிடித்த தீர்வுகளை வரிசைப்படுத்தினால் கணினித் தமிழ் வரலாறு நமக்குக் கிடைத்துவிடும்.

உத்திரமேரூரில் இருந்து தாத்தா காலத்தில் மலேசியாவிற்குப் போனது இவர் குடும்பம். அப்பா தமிழாசிரியர். எழுத்துகளின் மீதான இவர் ஆர்வம் தொடக்கப்பள்ளிக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. நாளிதழ்களில் இருந்து எழுத்துகளை வெட்டி ஒட்டி ஜெராக்ஸ் எடுத்து அப்பாவுக்காக லெட்டர்ஹெட் செய்தார். தட்டச்சு இயந்திரம் வந்தபோது தானாகவே கற்றுக்கொண்டு அப்பாவின் நாடகங்களைத் தட்டச்சு செய்தார். மாணவர் ஆண்டுவிழா மலர் நூல்களுக்காக அச்சுக் கோக்கும் பணிகளில் ஆர்வம் காட்டினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நண்பர் திரு முத்துவைப் பற்றி இப்படி ஓர் ஆழமான, அழகான கட்டுரையைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!