கிரேட் நிகோபோர் தீவில் 72000 கோடியில் திட்டப்பணிகளைத் தொடங்க உள்ளது ஒன்றிய அரசு. கடல்வழிப் பாதை போட்டியில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை இத்திட்டம் வழங்கும். இந்தியாவின் பாதுகாப்பு என்கிற கோணத்திலும் பலமான காரணங்கள் உள்ளன. பாதுக்காகப்பட வேண்டியவர்கள் என இந்திய அரசு அறிவித்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தோர் இங்கே இன்னும் வசிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி இத்திட்டத்தை எதிர்க்கின்றனர்.
இமயமலைத் தொடரில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்கும் இதைப்போல எதிர்ப்பு எழுந்து நீதிமன்றம் வரை போனது. தமிழ்நாட்டிலும் பரந்தூர் விமானநிலையம், சேலம் பசுமை வழிச் சாலை திட்டங்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. இயற்கையைப் பாதுகாப்போம் என்கிற முழக்கமே இப்போது பழையதாகிவிட்டது. காடு, மலை, மரம், ஆறு அனைத்தும் நம்மைப் போலத்தான், நமக்கிருக்கும் உரிமை இவற்றுக்கும் இருக்கிறது என்கிற வாதம் வலுக்கிறது. நாம் இயற்கையைப் பாதுகாப்பது என யோசிக்காமல் அவற்றின் உரிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார்கள்.
Add Comment