Home » ஒட்டுமில்லை, உறவுமில்லை!
நம் குரல்

ஒட்டுமில்லை, உறவுமில்லை!

கனடா உடனான தனது தூதரக உறவினை இந்தியா முறித்துக்கொண்டிருக்கிறது. இந்தியத் தரப்பு நியாயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு பெரிய நாட்டுடனான உறவை இன்னொரு பெரிய நாடு முறித்துக்கொள்வதை இதர உலக நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா – ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளாது. ஆனால், அதற்காக ஓர் அவமரியாதையைச் சகித்துக்கொள்ள இயலாது என்கிற இந்திய அரசின் நிலைபாடு நியாயமானதே.

இந்தியாவைப் பொறுத்தவரை, காலிஸ்தான் பிரிவினைவாதம், புரட்சி, கிளர்ச்சியெல்லாம் பண்டைய வரலாற்றின் ஒரு பக்கம். இன்று அதற்கு இங்கே இடமில்லை. ஆனால் புலம் பெயர்ந்த பஞ்சாபியரில் சிலர் இன்னமும் காலிஸ்தான் கனவுடன் கனடாவில் அவ்வப்போது கொடியேந்திக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பல காலமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒப்பீட்டளவில் இதர மேலை நாடுகளில் வசிக்கும் பஞ்சாபியரைக் காட்டிலும் கனடாவில் எண்ணிக்கை அதிகம். கனடிய மக்கள் தொகையில் சுமார் இரண்டு சதவீதம் (சுமார் எட்டு லட்சம் பேர்) பஞ்சாபியர்கள் இருக்கிறார்கள். அதாவது, குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு சிறுபான்மை இனத்தவர். அவர்கள் அங்கே புதிய ஜனநாயகக் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நிறுவி, நேரடி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த முறை ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்தபோது இந்தக் கட்சி அவரது கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றாக இருந்தது. காலிஸ்தான் பிரிவினைவாத முழக்கத்தை எப்போதும் ஆதரிக்கும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் ட்ரூடோ கூட்டணி வைத்து ஆட்சியமைத்ததை அப்போதே இந்தியா கண்டித்தது. அது நிச்சயமாக இரு நாட்டு உறவுகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!