வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள்கள் சந்தைக்கு நகரம்தான் இலக்கு. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்தாண்டு கிராமப் பகுதிகளில் விற்பனை கூடி தேவை அதிகரித்திருப்பதாகத் தகவல் வருகிறது.
மத்திய அரசு, தங்கள் முயற்சியால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், கிராமப்புற நலத்திட்டங்கள் போன்றவற்றால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். அடுத்தடுத்து நடந்த தேர்தல்கள் பணப்புழக்கம் அதிகரிக்கக் காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
எப்படியானாலும் கிராமப் பகுதிகளில் வியாபாரம் கூடியிருப்பது நல்ல செய்தியே. இந்தியா, கிராமங்கள் அதிகம் உள்ள நாடு. சாலை வசதி, மின்சாரம் இரண்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நடந்த அதிவேகப் பொருளாதார ஏற்றம் போல இந்தியாவிலும் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Add Comment