Home » வலையில் சிக்காத மனிதாபிமானம்
நம் குரல்

வலையில் சிக்காத மனிதாபிமானம்

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால் மீனவர்கள் விவகாரம் தவிர்க்க முடியாத பேசுபொருள். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அதிபரை வலியுறுத்தும்படி மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கும்படி அநுரவிடமும் கோரிக்கை வைத்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் மீனவர்கள் விவகாரம் விவாதிக்கப்பட்டது. இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. மனிதாபிமான அடிப்படையில் இவ்விவகாரத்தை அணுக வேண்டும் என்று மோடி தன் பேச்சில் குறிப்பிட்டார். இரு நாடுகளை பாதிக்கும் தொற்று நோயாக இவ்விவகாரம் இருக்கிறதென்றும் இணைந்து தீர்வு காண முயல்வோம் என்றும் குறிப்பிட்டார் அநுர. அதோடு, இரட்டை இழுமடி வலைகள் பயன்பாடு கட்டுக்குள் வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் இரு வேறு பெரிய சிக்கல்களை உள்ளடக்கியது. இந்திய மீனவர்கள் இழுமடி வலைகள் பயன்படுத்தி மீன்வளத்தை அதிகளவு சுரண்டுவது. இலங்கை ராணுவம் விதி மீறும் மீனவர்களைத் தடுப்பதாகச் சொல்லி அத்துமீறி இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சுட்டுக் கொல்வதும் இரண்டாவது சிக்கல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!