Home » சிக்கிக்கொண்டது யார்?
நம் குரல்

சிக்கிக்கொண்டது யார்?

ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி திரும்புவதுதான் திட்டம். ஒன்பது மாதங்கள் இருக்கப்போகிறோம் என்பதை இருவரும் எதிர்பார்க்கவில்லை.

சுமார் முப்பதாண்டுகள் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விண்வெளி ஓடத்துக்கு 2011ஆம் ஆண்டு ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது. அதன் பிறகு, ரஷ்யாவின் சோயஸ் விண்கலத்தை நம்பித்தான் விண்வெளிப் பயணங்கள் திட்டமிடப்பட்டன. நமக்கு நாமே தயாரிப்போம் என்று போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களைப் பணித்தது அமெரிக்க அரசு. போயிங் உருவாக்கிய ஸ்டார்லைனரை ஓட்டிப்பார்த்து சோதனை செய்யத்தான் சுனிதாவும் வில்மரும் போனார்கள்.

போகும்போதே தட்டுத்தடுமாறிப் போய் ஒரு வழியாக டாக்கிங் நடந்து விண்வெளி நிலையத்தை அடைந்தனர். ஹீலியம் வாயுக் கசிவு கண்டறியப்பட்டதால் திட்டமிட்டபடி திரும்பிவராமல், அங்கேயே இருந்து சரி செய்ய முயன்றனர். (முன்னதாக இப்படி விண்ணில் இருந்து பூமி திரும்பும்போதுதான் கல்பனா சாவ்லாவைப் பறிகொடுத்தோம்.) பதினெட்டாம் தேதி திரும்ப வேண்டியவர்களை இருபத்தெட்டாம் தேதி வரை தாமதிக்க வைத்தது நாசா. பின்னர், தங்கள் வீரர்களின் உயிருக்கு மதிப்புக கொடுத்து, வேறு ஏதாவது வழி பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது. ஆளில்லாமல் ஸ்டார்லைனரை மட்டும் திரும்ப அழைத்துக்கொண்டது.

அடுத்து அனுப்பப்போகும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் க்ரூவில் திரும்பி வரட்டும் என்று சுனிதாவுடன் பேசி முடிவெடுத்தது நாசா. அதுவரையில் விண்வெளியில் இருக்கும்படியானது. அந்த முடிவெடுக்கவே ஒரு மாதம் ஆகிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நம் குரல் :
    உள்ளதை உள்ளபடி எடுத்துரைப்பதே மெட்ராஸ் பேப்பரின் தனித்தன்மை. அந்த வகையில் இந்த வாரமும் நம் குரல். ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு வகையான செய்தி. சுனிதா வில்லியம்சின் விண்வெளிப்பயணத்தின் சரியான தகவலும் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இங்கேம னிதர்களை மயக்க நிலையில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது நாம் என்ன செய்ய முடியும்?

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!