திமுக அரசை அகற்ற வேண்டும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு நோக்கம் இல்லை.
எந்த விதத்திலும் மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகாமல், எல்லாவற்றிலும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி, தமிழ்நாட்டை ஆள்வது அவர்களுக்குப் பிடிக்காதிருப்பது இயல்பே. ரெய்டுகள், வழக்குகள், நிதி முடக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் மேற்படி எரிச்சலின் அவ்வப்போதைய விளைவுகள். பேச்சின் மூலமும் செயல்களின் மூலமும் மாநிலத்தை நிரந்தரமாகவே எரிச்சலில் வைத்து, அதன் வழியே சொற்களைப் பிடுங்கிப் பிழை சுட்டுவதற்கென்று ஓர் ஆளுநரை வைத்திருக்கிறார்கள். உச்சநீதி மன்றமே அவரது செயல்பாடு தவறு என்று சுட்டிக்காட்டினாலும் தனக்கு இடப்பட்ட பணியை அவர் தொடர்ந்துகொண்டேதான் இருப்பார்.
இதுவரை பார்த்ததெல்லாம் ஒன்றுமில்லை என்பது போலத் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல விதங்களில் குடைச்சல்கள் இருக்கத்தான் போகின்றன. ஆட்சியைக் கலைப்பது வரை ஆலோசிக்காதிருக்க மாட்டார்கள்.
Add Comment