புத்தாண்டு தொடங்கும் போதே சென்னை புத்தகக்காட்சியும் தொடங்கியிருக்கிறது. கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னையின் கலாசார அடையாளங்களுள் தலையாயதாக இது மாறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தருவது. வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டம் உயர்ந்துகொண்டே செல்வதாக ஒவ்வோராண்டும் சொல்கிறார்கள். அதற்கு இணையாக வாசிப்புப் பழக்கம் உயர்ந்துள்ளதா? இதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் தமிழ் வாசிப்பு எப்படி உள்ளது என்பது சாய்வின்றி ஆராயப்பட வேண்டிய விஷயம்.
தெருவில் செல்லும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர் யாரையாவது நிறுத்தி புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்பதே பதில். இதிலும் தனியார் பள்ளிகளில் படித்தோர் என்றால் தமிழில் வாசிக்கவே தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.
Add Comment