ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மதவெறியே காரணமாக இருந்தது. இரண்டு சம்பவங்களுமே இந்தியாவின் பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதிகளால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டவை.
ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.
மகாத்மாவின் படுகொலையைப் பெரும்பான்மை இந்துக்கள் கொண்டாடவில்லை. ஆனால், அவரது மரணத்துக்கு நாற்பத்து நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தைக் கொண்டாடுவதற்கு நாடு முழுவதும் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
Add Comment