கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிடுகிறார்கள்.
இம்முறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அண்ணாமலை தகவல்களைக் கேட்டு வாங்கி அளிக்க, அதை வைத்துக்கொண்டு பிரதமர் மோடி காங்கிரஸின்மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்.
Add Comment