மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை?
என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சியாகிவிடுவதே காரணம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்ட மன்றத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகள்கூட அத்தியாவசிய, அவசரப் பிரச்னைகளில் மாநில அரசினை ஆதரித்தோ அல்லது எதிர்க்காமல் இருந்தோ கடமையாற்ற அனுமதிக்கும். அந்தப் பொறுப்புணர்வு ஓர் ஆளுநருக்கு இல்லாமல் போகும்போதுதான் சிக்கலாகிவிடுகிறது.
சமீபத்தில் உச்சநீதி மன்றம் இந்தப் பிரச்னை சார்ந்து ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுதான் மாநிலத்தை வழி நடத்த வேண்டும், மக்களுக்கு வேண்டியதையும் நியாயமான பிற தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது நமது ஜனநாயகத்தின் அடிப்படை.
இதன்படி, சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதன் மூலம், தீர்மானங்களைச் சட்டமாக்க விடாமல் தடுக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை.
இதுதான் அத்தீர்ப்பின் சாரம்.
Add Comment