மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியிருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கிறார்.
அமித்ஷா பதில் சொல்வார். வேறு பலர் சொல்வார்கள். யாரோ எதையோ சொல்லத்தான் போகிறார்கள். ஆனால் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கும் ஒரு பிரச்னை சார்ந்து நேரடியாக விளக்கம் அளிக்கப் பிரதமரை எது தடுக்கிறது?
மணிப்பூரில் ஆள்வது பாரதீய ஜனதா கட்சியின் அரசு. ஆளுநர் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பான்மை மெய்தி இனத்தவருக்கும் சிறுபான்மை குக்கி இனத்தவருக்கும் இடையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இம்மோதலில் ஆளும் பாஜக அரசு மெய்தியினரின் பக்கம் நிற்பதும் அக்காரணத்தாலேயே இக்கலவரம் முடிவற்று நீண்டுகொண்டிருப்பதும் வெளிப்படை.
குர்கியின மக்கள் பர்மிய குடியேறிகள்னு சொல்லி இனப்படு கொலை அந்நிய நாட்டு சதிங்கிற பிரச்சாரத்தையே அரசும் பிரதமரும் முன்னெடுக்கிறார்கள். அதுவே உண்மை என்றாலும் தடுக்க வேண்டியது மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாஜக தானே??. பிரதமரின் பொறுப்பற்ற இந்த நகைச்சுவை பதில் உரையையா தேசம் எதிர்பார்த்தது.