ஆண்டு, உற்சாகத்தோடுதான் பிறந்தது. ஜனவரி முதல் வாரத்திலேயே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘உயிரினங்களின் மொழி’ தொடரை எழுதத் தொடங்கினேன்.
எழுத்துக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை வாசிப்புக்கும் தர வேண்டும் எனத் தீர்மானித்தேன். அந்தப் பயணம் அசோகமித்திரனிடமிருந்து தொடங்கியது. அவருடைய ஒட்டுமொத்தப் படைப்புகளையும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற தீராத வேட்கையோடு ஆரம்பித்தேன். இடையில் சில தடைகள் வந்தாலும், கடல்நீரை இரு கைகளால் அள்ள முயல்வது போல, என்னால் இயன்றவரை அசோகமித்திரனை வாசித்துச் சேகரித்துக் கொண்டேன்.
அதற்குப் பிறகு இந்த ஆண்டின் மிக முக்கியமான அல்புனைவு நூலுக்காகத் தயாரானேன். இதற்காக ஓரிரு மாதங்கள் தேடி வாசித்தேன்; அமெரிக்காவிலிருந்து தோழி பத்மா அனுப்பி வைத்த புத்தகங்களும் பெரும் துணையாக இருந்தன. எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால் பத்து பாகங்களில் மூன்று பாகங்கள் முடிந்த நிலையில் அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. பெரும் ஆசையோடு தொடங்கிய அந்த முயற்சி தற்போது அப்படியே கிடப்பில் உள்ளது.














Add Comment