இயற்கைப் பேரழிவுகளால் கடந்த வருடம் 400 பில்லியனுக்கும் மேலான பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கின்றன உலக நாடுகள். தக்க முன்னெச்சரிக்கைத் திட்டங்களால் இப்போதெல்லாம் பெருமளவு சேதங்களைக் குறைக்க முடிகிறது. செல்வ வளம் கொழிக்கும் நாடுகள் உடனேயே மீள்கின்றன. ஏழை நாடுகள் மீண்டு எழ அதிகக் காலம் எடுத்துக்கொள்கின்றன.
கோடை என்றால் கலிஃபோர்னியாவில் காடுகளில் பற்றிக்கொள்ளும் நெருப்பு, மழைக்காலங்களில் ஆங்காங்கே வலுத்துக்கொண்டு வரும் சூறாவளி புயல் என அமெரிக்காவைத் தாக்கும் இயற்கைப் பேரழிவுகள் அதிகம்.
ஹியுஸ்டனை தாக்கிய ஐக்(ike), நியுஜெர்ஸியைத் தாக்கிய சாண்டி நியுஆர்லியன்ஸ் சுழற்றிய கட்ரீனா, இப்போது ஜியார்ஜியா கரோலினா பகுதி மக்களைக் கதிகலங்க வைத்த ஹெலீனும் ஃப்ளோரிடா பகுதியை மிரட்டிய மில்ட்டனும் அமெரிக்காவைப் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன.
சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆன சேதங்கள், வங்காள தேசத்தில் உண்டான வெள்ளக்காட்டினால் உண்டான சேதம், பெருவில் ஏற்பட்ட நெருப்பு, இந்தியாவில் செப்டம்பர், டிசம்பர் மாத வெள்ளம், மியன்மார், நைஜீரியாவில் வெள்ளம் எனப் பல இயற்கைச் சீற்றங்களால் ஆன பெருமழிவை யாராலும் மறக்க முடியாது. ஒரு பேரழிவுக்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்புவது சவாலானதும் சிக்கலானதும் கூட.
Add Comment