கலவரமூட்டும் சப்வே களேபரங்கள்
மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே உரிமையாளர். பேசியது யாரோ ஒரு பெண், இங்கே சப்வேயில் ஒரு விபத்து, உங்கள் பணியாளர் ஆக்ஸோஸ் காயமடைந்துவிட்டார் என்றதும், பின்னால் என் அதிகாரி எலி நெய்மை அழைக்கவும் என்ற ஆக்ஸோஸினின் குரலும் கேட்டதும் உறைந்து போனார். அதற்குப்பின், எல்லா நியூயார்க் பத்திரிகைகள், செய்தித் தொலைக்காட்சி நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இதே செய்தி!
அமெரிக்காவிற்குக் குடியேற வரும் எல்லா அயல்நாட்டவரைப் போலவே நெஞ்சு நிறையக் கனவுகளையும் கடின உழைப்பையும் மூலதனமாகவும் கொண்டு துருக்கியில், ஒரு புகழ்பெற்ற பத்திரிகையில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு 2017-இல் குடியுரிமை கேட்டு வந்தார், ஆக்ஸோஸ் (Emine Yilmaz Ozsoy) வந்த சில மாதங்களுக்குள்ளேயே ஒரு கஃபேயில் வேலை பார்த்துக்கொண்டே வடிவமைப்பாளராகவும் சில பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டே படிக்கவும் செய்தார். அவர் நியூயார்க் நகர வாழ்க்கை முறையைச் சித்திரங்களாகத் தீட்டுவது பலரின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. புமா, சிகாகோ டைம்ஸ், air Bnb போன்ற இடங்களில் வடிவமைப்பாளராகப் பணியாற்றவும் கஃபேயில் வேலை செய்யவும் ஆரம்பித்தார். அவரது கணவரையும் குழந்தைகளையும் இங்கே அழைத்துக்கொண்டு வரவும் இங்கேயே தனக்கான குடும்பத்தை உறவுகளை வளர்க்கவும் ஆரம்பித்தார். கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்டு வளர ஆரம்பித்த போதுதான் இந்தத் துயர நிகழ்வு நடந்தது.
last para sums up the idea…good one mam