மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகராகுவா, யுனெஸ்கோ நிறுவனத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துள்ளது. “லா பிரென்சா” என்ற நிகராகுவா பத்திரிகைக்கு யுனெஸ்கோவின் கியர்மோ கானோ, அதாவது பத்திரிகை சுதந்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது. நியாயமாகத் தனது நாட்டுப் பத்திரிகைக்கு ஐக்கிய நிறுவனம் விருது அளித்ததற்கு நிகராகுவா பெருமையடைய வேண்டும். ஆனால், தற்போதைய நிகராகுவாவின் அதிபரான டேனியல் ஓர்டேகா இந்த விருதை முற்றிலும் விரும்பவில்லை என்பதால் யுனெஸ்கோவிலிருந்து தனது நாடு வெளியேறுவதாகக் கூறியுள்ளார்.
நூறு ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் பத்திரிகை நிறுவனம் லா பிரென்சா. அரசு எந்தப்பக்கம் சாய்ந்தாலும், தனக்கென்று எந்த ஒரு சார்பும் எடுக்காமல் நடுநிலையுடன் உண்மையைப் பேசும் கொள்கைகொண்ட நாளிதழ் இது. சர்வாதிகாரம், உள்நாட்டுப் போர், பனிப்போர் போன்ற காலங்களையெல்லாம் சமாளித்த இந்நிறுவனம் தற்போதைய ஓர்டேகா ஆட்சியில் நிலைகுலைய நேரிட்டது.
2021இல் நிகராகுவா போலீஸ் லா பிரென்சா அலுவலகத்தை முற்றுகை இட்டார்கள். பொருள் சேதம், ஊழியர்கள் மீது வன்முறை, தலைமை அதிகாரியைக் கைது செய்தது போன்ற எண்ணற்ற அராஜகங்களைச் செய்தது போதாமல் நூறாண்டு நிறுவனத்தை ஒரே போடாக மூடிவிட்டார்கள். ஊழியர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாட்டைவிட்டுப் பறந்தோடினர். ஓர்டேகா அரசாங்கம் இவர்களின் குடியுரிமையை ரத்து செய்தது. இந்தச் சம்பவம் நடந்தது ஆகஸ்ட், 13, 2021. அன்று வெளியான நாளிதழ்தான் லா பிரென்சாவின் கடைசியாக அச்சில் பதிக்கப்பட்ட செய்தித்தாளாகும்.














Add Comment