மலைகளின் ராணி
ருவாண்டா நைல் நதியும் அதன் பல்வேறு கிளை நதிகளும் ஓடும் நாடு. ருவாண்டா என்றால் ஆயிரம் மலைகள் கொண்ட நாடு. அழகான மலைப் பிரதேசம். நீர் வற்றிப்போனால், பயிர்கள் வாடி வறுமை தாண்டவமாடும். 50 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழே உள்ளனர். 20 சதவீதம் கீழ் மத்தியத்தரக் குடும்பங்கள் உள்ள ஏழை நாடு.
வறுமை ஒருபக்கம், அவ்வப்போது வரும் வன்முறையும் உரிமையியல் போரால் வந்த உயிரிழப்புகளும் மறுபக்கம்.
நையபரொங்கோ(Nyabaronga) எனப் பெயர்கொண்ட நைல் பயிர்களுக்கும் மனிதர்களுக்கும் தாகம் தணிக்கிறது. நாட்டின் உள்பகுதிகளில் ருஹ்வா, குகூ எனக் கிளைகளாகப் பிரிந்து செல்கிறது. ஆனாலும் கரை புரண்டு ஓடியதாகச் சரித்திரம் இல்லை. நீர்ப்பாசனத்திற்கே வழியில்லை.
சரியான கழிவு நீர் அகற்றும் வசதிகளோ கழிப்பிடங்களோ இன்றி கால்நடைகள், மனிதர்களின் மலக் கழிவுகள் சேர்ந்த தண்ணீர். விளைவாகப் பலவிதத் தொற்றுநோய்கள் எந்நாளும்.
Add Comment