Home » ஒரு சொல் கொல்லும்
குற்றம்

ஒரு சொல் கொல்லும்

‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்கிறது திருக்குறள். நாம் சொல்லும் ஒரு சொல் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. ஒரு சொல் வெல்லலாம், ஒரு சொல் கொல்லலாம். அதை அந்தச் சொல்லே தீர்மானிக்கும்.

ஒரு ஃபேஸ்புக் கமெண்ட் ஓர் இளைஞரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது. ‘எனது மகனை மீட்டுத் தாருங்கள்’ என்ற அந்த இளைஞரின் தாயின் கதறல் தமிழர் வாழ் நிலமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை நாடெங்கும் அனோஜன் என்ற அந்த இளைஞருக்காகப் பிரார்த்தனைகளும், ஒன்றுகூடல்களும், கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

கதிர்காமம் முருகனை தரிசிப்பதற்காக யாத்திரிகர்கள் சிலர் பாத யாத்திரை செல்கிறார்கள். வழியில் ஒரு நாயும் இணைந்து கொள்கிறது. அவர்கள் கிழக்கு இலங்கையின் ஒரு பகுதியில் பயணம் செய்தபோது ஒருவர் நாயை எட்டி உதைத்து விடுகிறார். இந்த விவகாரம் இந்து – இஸ்லாம் முறுகலாக ஃபேஸ்புக்கில் கொழுந்துவிட்டு எரிகிறது. இதன் உச்சமாக, குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். அபராதம் விதித்து அவரை விடுதலை செய்கிறது இலங்கை நீதிமன்றம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!