Home » ஒரு விபத்து, ஒரு நூறு கேள்விகள்
இந்தியா

ஒரு விபத்து, ஒரு நூறு கேள்விகள்

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில், மாணவர்களின் முக்கியத் தங்குமிடப் பகுதியாக விளங்கும் சத்யா நிகேதனில், ஐந்து மாடிகளைக் கொண்ட தனியார் மாணவர் விடுதி (Boys PG) ஒன்று 2026 செப்டம்பர் 6 அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் பலரும் காயமடைந்தனர்.

இதே பகுதியில் ஏற்கெனவே 2022 ஏப்ரல் 25 அன்று, புதுப்பிப்புப் பணிகளின்போது மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே பகுதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிழப்பு, கட்டடப் பாதுகாப்பு மற்றும் நகராட்சி கண்காணிப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

சத்யா நிகேதன் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட கட்டடத்தின் சிதைவாக மட்டும் பார்க்க முடியாது. பாதுகாப்பற்ற சத்யா நிகேதன்PG தங்குமிடங்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள், பழைய கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், போதிய கட்டமைப்புப் பாதுகாப்பு ஆய்வின்மை, ஒழுங்குமுறை அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பாதுகாப்பான, மலிவான மாணவர் தங்குமிடங்களின் பற்றாக்குறை எனப் பல காரணிகள் ஒன்றோடொன்று இதில் பின்னிப் பிணைந்துள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!