Home » உரி – 158
உரி நாள்தோறும்

உரி – 158

158. மூன்றாவது கரமும் இரண்டாவது கருவியும்

வேட்டன், நெடுநேரம் அமைதியாக இருந்தான். நொடிகள், மணித் துளிகள் கரைந்து, ஒரு நாழிகைப் பொழுதான பின்பும் அவன் ஏதும் பேசவில்லை. தீவிரமாக அவன் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் என்றே மல்லனும் முனியும் நினைத்திருப்பார்கள். ஆனால் எனக்குத் தெரியும், அவன் தனது சிந்தையின் வெறுமைக்குள்தான் உழன்றுகொண்டிருந்தான்.

உண்டாகியிருக்கும் சிக்கலில் இருந்து விடுபடுவதற்குப் பேசித் தெளிவதொன்றே வழி என்று அவன்தான் நினைத்திருக்கிறான். அதனால்தான் மல்லனையும் முனியையும் தன்னிடத்திலேயே இருக்கச் சொல்லியிருந்தான். மாயமுனி தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் திரையிடாடமல் சொல்லிக்கொண்டே வந்து, இறுதியில் அபாரமானதொரு திட்டத்தையே முன்வைத்திருக்கிறான் என்று மல்லன் கருதினான். அதை அவன் வெளிப்படையாகச் சொல்லவும் செய்தான்.

இது சிறந்த திட்டமாக இருக்கும் என்று தோன்றுகிறது ஐயனே. நான் அந்த பாரதாய தத்தனை அறிவேன். உணர்ச்சிப் பிழம்பான வாலிபன். சார்வாகனுடன் இருந்தும் தனது நியமங்களில் இருந்து விலகாதவன். அவனது சிவ பக்தி அணுவளவும் குறைபாடுடையதல்ல,

என்று அவன் தனக்குத் தெரிந்த விவரங்களை வேட்டனிடம் சொன்னான். அதற்கும் அவன் ஒரு தலையசைப்பையும் வழங்காமல் அமைதியாகவே இருந்தான். எனவே, அந்த ஆலோசனையை வேட்டன் பரிசீலனை செய்து பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று அவர்கள் இருவரும் நினைத்து அமைதி கொண்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!