அப்பாவி மக்கள் ஒருபக்கம், அரசுகள் இன்னொரு பக்கம். அரசுகளின் பார்வையில் மக்கள் ஆளப்பட வேண்டியவர்கள். உலகின் பெரும்பாலான அரசுகள் அடக்கியாள்வதையே கொள்கையாகக் கொண்டுள்ளன. அதிலும் இஸ்ரேல் நாட்டின் தற்போதைய நெதன்யாகு அரசின் செயல்பாடுகளை அடாவடித்தனத்தின் உச்சம் என்றே குறிப்பிடலாம்.
இறை நம்பிக்கை, வரலாறு, பாதுகாப்பு என்ற காரணங்களை முன்னிறுத்தி இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் அட்டூழியங்களுக்கு அளவில்லை. நெதன்யாகு அரசுக்கு இஸ்ரேல் குடிமக்கள் மட்டுமே ஆளப்பட வேண்டியவர்கள். எனில், பாலஸ்தீனியர்கள்? அவர்கள் அப்புறப்படுத்த வேண்டியவர்கள், அல்லது அழிக்கப்பட வேண்டியவர்கள்.
பாலஸ்தீனத்தைப் படிப்படியாக இஸ்ரேல் ஆக்கிரமிக்கத் தொடங்கி சுமார் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன.















Add Comment