Home » இந்தச் சம்பளம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
உலகம்

இந்தச் சம்பளம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

பிரதமர் லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் இந்திய மதிப்பில் சுமார் இருபத்தேழு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மிக அதிக ஊதியம் பெறும் உலகத் தலைவர்களில் லாரன்ஸ் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்த ஊதிய உயர்வுக்குப் பின்னால், சிங்கப்பூரை நவீன அரசாக வடிவமைத்த லீ குவான் யூ காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்த ஒரு நிர்வாகக் கொள்கை உள்ளது. தனியார் துறையில் உள்ள மிகச் சிறந்த திறமையாளர்களை அரசுப் பணிக்கும் தலைமைப் பொறுப்புகளுக்கும் ஈர்ப்பதே அந்தக் கொள்கை.

சிங்கப்பூரின் பெருநிறுவனங்களிலும் நிதி மற்றும் சட்டத் துறைகளிலும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் நிபுணர்கள் பொதுவாழ்வுக்கு வரும்போது பொருளாதார இழப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக, தனியார் துறையின் உயர் வருமான நிலைக்கு இணையாக அந்நாட்டின் அரசாங்கத் தலைவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான, வெளிப்படையான ஊதிய அமைப்பின் மூலம் மறைமுகச் சலுகைகள் மற்றும் முறைகேடுகளுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதும் இந்தக் கொள்கையின் ஒரு முக்கிய நோக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!