Home » திசையெலாம் தமிழர் – 17
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 17

கே.ஆர். ஸ்ரீதர்

மனித குலத்தின் வளர்ச்சிக்கான ஆரம்பமாக இரண்டு கண்டுபிடிப்புகளை எல்லோரும் சொல்வதுண்டு. முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம். மூன்றாவது இடத்தில் இணைந்திருப்பது மின்சாரம். இன்றைய தொழில்நுட்ப உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக மின்சாரம் மாறியிருக்கிறது.

நீர் மூலமாக மின்சாரம், காற்று மூலமாக மின்சாரம். சூரியசக்தி மூலமாக மின்சாரம், அனல் மின் நிலையங்கள் வழியாக மின்சாரம், அணு உலைகளின் வழியாக மின்சாரம் என இந்தத் துறை பரிமாண வளர்ச்சி பெற்றிருக்கிறது. இப்போது மின்சாரக் கட்டமைப்பைச் சாராத (off – grid) எரிபொருள் கலன்களில் (Fuel Cells) மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

எங்கு மின்சாரம் தேவையோ அங்கேயே அது தயாரிக்கப்பட வேண்டும். அது எப்போதும் இயங்கக்கூடியதாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படியான மின்சாரத்தைத் தயாரிக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கக்கூடிய நிறுவனம் ‘புளூம் எனர்ஜி’ (Bloom Energy). அதனுடைய இணை நிறுவனர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர். ஸ்ரீதர். 2001ஆம் ஆண்டு அயன் அமெரிக்கா (Ion America) என்ற பெயரில் தொடங்கப்பட்ட அவருடைய நிறுவனம், ஐந்தாண்டுகளில் புளூம் எனர்ஜி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!