‘ஏம்மா எனக்கு இப்படி ஒரு பேரு வச்ச?’
‘ஏண்டா, உன் பேருக்கென குறைச்சல்? திருப்பதி சாமி பேருதானே?
நீ வேணும்னா பாரு, உனக்குக் காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.’
‘மண்டை முடிதான் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஸ்ரீநிவாசன் ரொம்ப கிரிஞ்சான பேருமா. நம்ம தாத்தாவுக்கு நியூமராலஜி தெரியுமில்ல? அவர்கிட்டயாவது கேட்டு கொஞ்சம் மாடர்னா வச்சிருக்கலாம்ல.’
‘சரவணபெலகோல ஞான சௌகரிய வித்ய சுக நிச ஶ்ரீநிவாசன்.’
‘என்னம்மா இது?’
‘தாத்தா சொன்ன பேருதாண்டா, நியூமராலஜிபடி எல்லா லெட்டர்ஸையும் சேர்த்து சொன்னது. உங்க அப்பாதான் தாத்தா மனசு சங்கடப்படக் கூடாதேன்னு அவர் சொன்னதுல கடைசி வார்த்தை ஶ்ரீநிவாசனை மட்டும் கட் பண்ணி உனக்கு வச்சிட்டாரு.’















Add Comment