60 மலை
கோயம்புத்தூர் சைக்கிள் பயணத்தின்போது உண்டானதைவிட, அதைப்பற்றிக் கேட்கிற அத்தனைப் பேரும் வாயடைத்து நின்று விதவிதமாகப் பாராட்டியதில் உண்டான மகிழ்ச்சி அளப்பரியதாக இருந்தது. இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா. ஒருவர் விடாமல் ஏன் இதை இவ்வளவு பெரிதாகச் சொல்கிறார்கள் என்று சமயத்தில் தோன்றவும் செய்தது.
அதிலும் குறிப்பாக மரிய சந்திரா மேடம் – கும்மிருட்டில், மண்ணில் இறங்கி பள்ளத்தில் விழுந்துவிடப்போகிறோமே என்கிற பயத்தில் அடிக்கடி சாலையின் நடுவுக்கு வந்துகொண்டு இருந்ததைப் பற்றியும் பின்னால் வந்த கனரக வாகனங்கள், ஒடித்துக்கொண்டு உரசாதகுறையாய் அவனைக் கடந்து முன்னே சென்றதையும் சொன்னபோது – கன்னங்களில் கைகளை வைத்துக்கொண்டு, ‘ஐயோ சொல்லாதீங்க சொல்லாதீங்க. கேக்கவே பயமா இருக்கு.’ என்று குலை நடுங்கிப்போய்விட்டார்.
இதற்காகத்தான், அந்த சைக்கிள் பயணத்தையே மேற்கொண்டோமோ என்றுகூடத் தோன்றியது.














Add Comment