புபி புபி என்று தியானம் செய்துகொண்டு இருந்தவன் கடைசியில் கல்கியின் நினைவைப் போற்றுவதற்காக நடத்தப்படும் போட்டியின் மூலம் எழுத்தாளனாக அறிமுகமானதை என்னவென்று சொல்வது.
13. விபரீதங்கள்
என்னாச்சு. மெமோக்கு ரிப்ளை ரெடி பண்னிட்டியா என்றார் சாவித்ரி மேடம்.
ரெடியாகிக்கிட்டு இருக்கு… என்று சொல்ல ஆரம்பித்தவனை சொல்லாதே என்று அவசராமாக இடைமறித்தார்.
யார் எழுதித் தராங்கனு எங்கிட்டக் கூடச் சொல்லாதே. ஒதவி செய்ய வரவங்களுக்கு நம்மால ஆனது, அட்லீஸ்ட் உபத்திரவம் குடுக்காமையாவது இருக்கறதுதான் இல்லையா. ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லே, அதனாலதான் அவசரமா கெளம்பிப் போய்ட்டேங்கங்கறது உன் ரிப்ளைல இருக்கணும் புரிஞ்சுதா. அதை மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ’.
Add Comment