மத்திய கிழக்கில் இன்று நடைபெறும் ஒவ்வொரு அரசியல் அசைவும் உலகின் எண்ணெய் விலையைப் பாதிக்கிறது. அதற்கான காரணம் எளிது – ஈராக், ஈரான் மற்றும் அமெரிக்கா என்ற மூன்று நாடுகளும் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆதாரங்களில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன.
ஈராக் இன்று உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2003ல் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்ததில் இருந்து இன்று வரை ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் மேல் செலவு செய்துள்ளது. இந்த அளவு நிதி முதலீடு செய்யவேண்டுமானால் அதைவிட அதிக இலாபம் இருக்க வேண்டும். ஈராக்கைப் போன்ற பொருளாதாரத்தில் வலிமையற்ற நாட்டில் இருந்து இலாபம் கிடைக்காது என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். இந்த பிரமாண்டமான முதலீட்டிற்கு பின்னால் உள்ள அரசியல் இலாபம் என்ன?
ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி அமெரிக்க படையெடுப்பிற்குப் பின்னர் 2 மில்லியன் பீப்பாய்களில் இருந்து இன்று 5 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா ஈராக்கிற்கு கார்கள், கனரக இயந்திரங்கள் ஏற்றுமதி செய்துகொண்டு, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது ஆண்டொன்றுக்கு 10 பில்லியன் டாலர் வர்த்தகம். இதனால் ஒரு ட்ரில்லியனை ஈடு செய்ய முடியாது.















Add Comment