187. புன்னகை
மொரார்ஜி பிரதமரானதும் அமைக்கப்பட்ட பிங்களி ஜகன்மோகன் ரெட்டி கமிஷன் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், அத்வானி உள்ளிட்ட பலரையும் விசாரித்தது.
1978 ஜூன் 12ஆம் தேதி இந்திரா காந்தி அந்த கமிஷன் முன் ஆஜரானார். விக்ரம் மகாஜன் தலைமையிலான வக்கீல்கள் குழுவுடன் வந்து கமிஷனின் காவல் கண்காணிப்பாளர் துவாரகாநாத் முன்னிலையில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
அதன் முக்கியமான அம்சமே ‘நகர்வாலா என்ற பெயர் கொண்ட யாரையும் எனக்குத் தெரியாது! அவரோ, அவரது உறவினர்களோ எழுதிய கடிதம் எதுவும் தன் பார்வைக்கு வரவில்லை; அப்படி ஏதாவது கடிதம் வந்திருந்தாலும், அது சம்பந்தப்பட்ட அரசு இலாகாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும்.’
அதே போல கேஷியர் மல்ஹோத்ராவையும் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார்.
மேலும், ‘இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தன் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, இப்படியும் ஒரு சம்பவம் நடக்குமா? என்று வியந்தேன். வங்கியை ஏமாற்ற நடந்த ஒரு செயல் என்றே அதனைக் கருதினேன்’ என்றும் கூறினார்.














Add Comment