28 – பலூன்களோடு வெடித்த துப்பாக்கிகள்
01-செப்-2004.
பிஸ்லான், வடக்கு அசேஸியப் பிராந்தியம், ரஷ்யா.
பலூன்கள், பூச்செண்டுகள், கிரேயான் பெட்டிகளோடு ஸ்கூல் நம்பர் ஒன் பள்ளியின் ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்கக் காத்திருந்தார்கள். அன்று ரஷ்யப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நாள். செச்சனியத் தலைநகரிலிருந்து அறுபது மைல் தொலைவிலிருந்தது அந்தப் பள்ளி. ஏறக்குறைய எண்ணூறு குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் தொடக்க விழாவுக்குக் கூடியிருந்தார்கள்.
ஒன்பது மணி சுமாருக்கு வெடிச்சத்தம் கேட்டது. வளாகத்திலிருந்த பலூன்கள் வெடிக்கிறதென்று குழந்தைகள் குதூகலமானார்கள். AK – 47 வகைத் துப்பாக்கிகளால் வானத்தை நோக்கிச் சுட்டபடியே, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கூட்டத்துக்குள் நுழைந்தது. இன்னும் பல முகமூடிகள் டிரக்குகளில் நுழைந்து பள்ளி வளாகத்தைச் சுற்றி வளைத்தார்கள். சிதறி ஓடிய சிலரைச் சுட்டுக்கொன்று நடுவழியில் கிடத்தினார்கள். அந்தப் பிணங்களைத் தாண்டித் தப்பிக்கும் தைரியத்தை மற்றவர்கள் இழந்தார்கள். ஏறக்குறைய ஆயிரம் பேரைப் பள்ளியின் உடற்பயிற்சிக் கூடத்துக்குள் பணயக்கைதிகளாக அடைத்தார்கள்.
முகமூடிகளில் ஒருவன் கூட்டத்தை அமைதிப்படுத்தினான்.
















Add Comment