54. கைதும் மிரட்டலும்
இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்!
அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய், அனைத்து மாகாண கவர்னர்களுக்கும் ரகசியச் சுற்றறிக்கை அனுப்பி வைத்தார்.
கண்கொத்திப் பாம்பாக அவர்களைக் கண்காணித்து, சரியான வாய்ப்புக் கிடைத்தால் உடனே வழக்குப் போட்டு, உள்ளே தள்ளிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் அவர்.
Add Comment