Home » வளைகுடாவில் வருமான வரி
உலகம்

வளைகுடாவில் வருமான வரி

‘PIT’ எனும் தனிநபர் வருமான வரியை முதன்முதலாக வளைகுடா பிராந்தியத்தில் செயல்படுத்தப் போகிறது ஓமன் அரசு. இச்சட்டம் 2028 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரப்போகிறது. அதற்கான புரிந்துணர்வுக் கூட்டங்கள் பலதரப்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெறத் தொடங்கிவிட்டன.

பிரிட்டிஷ் காலனியாக இருந்தாலும் எழுபதுகள் வரை ஓமனில் புதுத் தொழில்நுட்பங்கள் எதுவும் நுழையவிடாமல் தடுத்தது அப்போதைய மன்னரின் அரசு. பிரிட்டனில் படித்த, அவருடைய மகனான இளவரசர் கபூஸுக்கு இச்செயல் அறிவார்ந்ததாகத் தோன்றவில்லை. மன்னரிடம் மற்ற நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். பழமைவாதியான மன்னர், மேற்கத்திய கலாசாரத்தைப் புகுத்தும் மகன் பேச்சைக் கேட்கவில்லை.

மாறாக, அரசாங்க அலுவல்களில் தலையிடுவதைத் தவிர்க்க அவரை வீட்டுக்காவலில் வைத்தார். இளவரசர் மேற்படிப்பை முடித்துவிட்டு ஓராண்டு பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றியவர். கிடைத்த  நேரத்தை பயன்படுத்தி அண்டைநாட்டு உறவு, தத்துவவியல், மதம் தொடர்பான பல புத்தகங்களைப் படித்து அறிவை விசாலப்படுத்தினார். பல துருப்புகளுக்குக் கடிதம் மூலம் தகவல் அனுப்பி ஆட்சியைக் கைப்பற்றத் தேவையான விஷயங்களைச் செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!