8. சாட்சியாக இரு
காதலில் பொறாமை உணர்வு இயல்பானது. என்னிடம் பேசாத என் காதலி இன்னொருவனுடன் என் எதிரிலேயே சிரித்துப் பேசுகிறாள். என்னுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளாதவள் கண்ட தடிமாடுகளுடன் நின்று செல்பி எடுக்கிறாள். எனது ஆத்மார்த்தமான முகநூல் பதிவுகளுக்கு ஒரு சிவப்பு ஹார்ட் கூடப் போடாமல் எவனோ ஒருவன் கிறுக்கிய நாலு வரிக்கு ஐந்து சிவப்பு ஹார்ட் போட்டு அமேசிங் என்று கமெண்ட் அடிக்கிறாள். அப்போது நான் என்ன செய்கிறேன்? என்னால் என்னதான் செய்து விட முடியும்? நான் பொறாமையில் வெந்து தணிகிறேன். இது காதலின் வலி மிக்க ஒரு பகுதி.
ஆனால் ஓஷோ இதனை அழுத்தி மூட வேண்டாம் என்று கூறுகிறார். பொறாமை உணர்வு ஏற்படும் போது அதனைத் தடுக்கக் கூடாது என்று கூறுகிறார்.
Add Comment