கடந்த வாரம் பலஸ்தீன் அதிபர் அல்லது அத்தாரிட்டியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் சீனாவுக்கு விஜயம் செய்த போது, தம் சரித்திரத்தைவிடப் பழைமையான ஒரு உலகப் பிரச்னையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது சீனா. ஆம். இஸ்ரேல் – பலஸ்தீன் தகராறில் சமாதான சகவாழ்வு விரும்பி என்ற குல்லாவைச் சீனா போட்டு இருக்கிறது.
அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அப்பால், பலஸ்தீன் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவதற்கு நவீன ஸோலார் சாதனங்களை அமைத்தல், உருக்கு மற்றும் ஸோலார் உற்பத்திக்கான தொழிற்சாலைகள், பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்று பெருவள்ளல் கணக்காய் சீனாவின் பொருளாதார நன்மைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது வழக்கமாய்ச் சீனா மூன்றாம் உலக நாடுகளில் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளும் பித்தலாட்டங்கள் போல இவையும் அமையுமோ என்று சந்தேகம் வருவது நியாயமானது. மேற்குலக நாடுகளால் இன்னும் ஒரு தேசமாக முறையாக அங்கீகரிக்கப்படாத பலஸ்தீன் வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழுந்ததில் ஆயிரம் பக்க நியாயங்கள் இருக்கலாம். ஆனால் சீனா என்று வரும் போதுதான் கொஞ்சம் இடறுகிறது.
Add Comment