6. விட்டாச்சு லீவு!
என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனம் வைத்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் சுமார் ஐம்பது பேர் வேலை செய்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் இவர் ஒரு வேலை செய்வார். தன்னிடம் வேலை செய்கிற ஐம்பது பேரும் அந்த ஆண்டில் (அதாவது, ஜனவரி முதல் ஆகஸ்ட்வரை) எத்தனை நாள் விடுமுறை எடுத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்ப்பார். யாராவது மிகக் குறைவான அளவில் விடுமுறை எடுத்திருந்தால், அவர்களைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார், ‘நீ என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது, மீதியிருக்கிற நாலு மாசத்துல நீ உன்னோட எல்லா விடுமுறைகளையும் எடுத்துத் தீர்த்துடணும். டிசம்பர் 31ம் தேதி உன்னோட கணக்குல ஒரு நாள்கூட விடுமுறை மீதியிருக்கக்கூடாது’ என்பார்.
அவரிடம் வேலை பார்க்கிற பெரும்பாலானோர் விடுமுறை என்றால் என்ன என்றே தெரியாத உத்தமர்கள். எப்போதாவது உடம்பு சரியில்லை, மாமா பையனுக்குக் காது குத்து என்றால் அரை நாள் விடுமுறை எடுப்பார்கள், அப்போதும் செல்ஃபோனில் அலுவலக மின்னஞ்சல்களைத்தான் படித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவு பொறுப்பானவர்கள், அல்லது, வேலையைத்தவிர வேறேதும் தெரியாதவர்கள்.
மிகச் சரியான அறிவுரை சார். நானெல்லாம் கேஷுவல் லீவ் கூட முழுதும் எடுக்காத ஆள்.கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நிலை தான்.