உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது.
ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.
அதாவது, குழாயிலிருந்து வரும் தண்ணீர் ஒருபுறம், ஓட்டைகளின் வழியாக வெளியேறும் தண்ணீர் இன்னொருபுறம். இந்த இரண்டையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மீதியிருக்கிற தண்ணீர்தான் அந்த வாளியில் தங்கும்.
இப்போது உங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஒரு நாளைக்குச் சில மணிநேரம்தான் தண்ணீர் வரும். அதை வைத்துத்தான் வீட்டில் எல்லாரும் குளிக்கவேண்டும்.
இதன் பொருள், நீங்கள் அந்த வாளியில் இயன்றவரை கூடுதலான அளவு தண்ணீரைச் சேர்க்கவேண்டும். அப்போதுதான் நாள்முழுக்கத் தண்ணீர்ச் சிக்கல் இருக்காது.
இந்தச் சூழ்நிலையில் நீங்கள் என்னென்ன செய்வீர்கள்? எப்படி உங்கள் வீட்டில் தண்ணீர்ச் சிக்கல் இல்லாதபடி பார்த்துக்கொள்வீர்கள்?
மிக அருமை.இளைய தலைமுறையினருக்கு இது சென்றடைய வேண்டும்.
எளிமையான உதாரணத்துடன் சிறப்பான பொருளாதாரப் பாடம். அருமை. பாராட்டுக்கள்.