இந்த ஆண்டு ஆண்டறிக்கையையும் வாசிப்பிலிருந்து தொடங்குகிறேன். மனச்சோர்விலிருக்கும்போது பக்தி, சுற்றுலா, உரையாடுதல், இசை, தியானம் போன்றவை எனக்குப் பலனளிப்பதில்லை. வாசிப்பும் உடற்பயிற்சியும் மட்டுமே பலனளிக்கும். காதல் தோல்வியினால் ஏற்படும் மன வலியைவிடத் தலைவலியும் பல் வலியும் கொடுமையானது என்பார்கள். அதைப் போல உடல் வலி அதிகமானால் மனச்சோர்வு குறைந்துவிடும். அதனால் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அதிகம் செய்தேன்.
அடுத்து வாசிப்பு. இவ்வாண்டு வாசித்த முதல் புத்தகம் அ. முத்துலிங்கம் கட்டுரைகள் முழுத் தொகுப்பு. அதேவேகத்தில் அடுத்து அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பைக் கையில் எடுத்தேன். சில சிறுகதைகள் வாசித்தேன். அவர் கட்டுரைகளையே சிறுகதை பாணியில் எழுதியுள்ளார் என்பது சிறுகதைகள் படித்தபோது தெரிந்தது. அது அவருடைய எழுத்துத் தேர்ச்சி. கட்டுரை, சிறுகதை எழுத்துகளைப் பிரித்து அறிய இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால் வேறு சில புத்தகங்களுக்குப் பிறகு அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வாசிக்கலாம் என்று வைத்துவிட்டேன்.














Add Comment