Home » ஒரு விபத்து, ஒரு மரணம் – ஒரு கொலை?
உலகம்

ஒரு விபத்து, ஒரு மரணம் – ஒரு கொலை?

இப்ரஹிம் ரைசி

தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர். ஊருக்கு வெளியே அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையின் கைதிகள், இவர்களை மட்டுமே சந்தித்தனர்- கடைசியாக.

ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர். ஒரே கேள்விதான் கேட்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாயா அல்லது அதுகுறித்த நோட்டீஸ் வைத்திருந்தாயா? ஆமாம் என்ற நேர்மையான பதிலே, அவர்களுக்கு எதிரான ஆதாரமானது. கண்களைக் கட்டிவிட்டு, பாம்பு போன்ற நீள்வரிசையில் இணைக்கப்பட்டார்கள். அந்த வரிசையின் முடிவில் தூக்குமேடை இருந்தது. நேரத்தைச் சேமிக்க, நான்கு அல்லது ஆறு பேராக மேடை ஏற்றப்பட்டார்கள். பின்னர் கயிறுகள் அல்லது க்ரேன்கள் மூலம் உடல்கள் கிருமிநாசினியில் நனைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட சரக்கு வண்டிகளில் அடைக்கப்பட்டன. தினந்தோறும் இரவு பெரும் புதைகுழிகளில், மொத்தமாக அடக்கச் சடங்குகள், ரகசியமாக நடந்தன.

ஈரானியப் புரட்சியில் (1988) அமெரிக்க விசுவாசியான ஷா மன்னரை விரட்டியடித்து, இஸ்லாமிய மதகுரு அயத்துல்லா கொமேனியை ஆதரித்தவர்கள் இவர்கள். பிறகு மதத்தின் பெயரால் அமைந்த அவரது ஆட்சியை எதிர்த்து, ஜனநாயகம் வேண்டியவர்கள். கார்ல் மார்க்ஸின் கம்யூனிசக் கொள்கை, இஸ்லாமிய இறையியல் மற்றும் சேகுவேராவின் போராட்ட உத்திகள், இவற்றாலானது இவர்களது இயக்கம். சிறையில் மீதமிருந்த இவர்களின் உடைமைகள் ஒரு பிளாஸ்டிக் பையில் போடப்பட்டு, குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டது. புதைகுழிகளின் முகவரிகள் மட்டும் யாருக்கும் ஞாபகத்தில் இல்லை. ‘மரணக் குழு’ எனப் பெயர் பெற்றது அந்த மூவர் குழு. விசாரணை, மேல்முறையீடு, குறைந்தபட்சக் கருணை என்ற எதுவுமேயின்றிக் கொல்லப்பட்டனர் ஐந்தாயிரம் சிறைக்கைதிகள். தெரிந்தவரை இந்தக் கணக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!