தி.நகரின் மிகப்பெரிய வியாபாரச் சந்தை என்றால் அது ரங்கநாதன் தெருதான். பேருந்தில் வந்தீர்களெனில் உஸ்மான் சாலையில் சரவணா செல்வரத்தினத்திற்கு நேர் எதிர் தெருவில் ஆரம்பித்து மாம்பலம் ரயில் நிலையத்தில் முடியும். ரயிலில் வந்தீர்களெனில் படியை விட்டுக் கீழே காலை வைப்பதே ரங்கநாதன் தெருவில்தான். பழச்சந்தைதான் தொடக்கம். வண்ண வண்ண பழங்கள் கூறு கட்டப்பட்டு நம் கண்களை ஈர்க்கும். எல்லாப் பொருளும் எளிய மக்களின் பயன்பாட்டிற்கேற்றாற் போல் விலை மலிவாக இருக்கும். தகரத்தில் சேஃப்டி பின்னில் ஆரம்பித்து தங்கத்தில் ஒட்டியாணம் வரை எல்லாப் பொருட்களும் இங்கே வாங்கலாம்.
பெரிய பெரிய ஜவுளி கடைகள் முதல் நடைபாதைக் கடைகள் வரை எல்லா இடத்திலும் எல்லா பொருளும் வாங்க முடியும். அவரவர் கையில் வைத்திருக்கும் பணத்திற்கேற்றாற் போல் வாங்கும் கடையை முடிவு செய்துகொள்ளலாம்.
ஜவுளி மட்டுமல்ல… வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள்ஃ, பர்னிச்சர், மொபைல் அக்சசரீஸ், பெல்ட், பேக், வாட்ச் என்று நம் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். அப்படியே ரயிலோ பஸ்ஸோ ஏறிவிட முடியும். உஸ்மான் சாலையைவிடவும் தி.நகரின் மிகப்பெரிய வணிகச் சந்தை ரங்கநாதன் தெருதான்.
Add Comment